விபத்திலும், உடல் நலக் குறைவாலும் மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சுப்பையா, தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஆறுமுகம், முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த தவசீலன் ஆகியோர் 29.6.2015 அன்று மரக்காணம் வட்டம், ஆலம்பாக்கம் கிராமம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேசன் 1.6.2015 அன்று மாரடைப்பால் காலமானார். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த நீலமோகன் 3.6.2015 அன்று சிதம்பரம் புறவழிச் சாலை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் . கோயம்புத்தூர் மாநகரம், உக்கடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்தன் 18.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் . விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குமாரசாமி 23.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த திரு. கலைமணி 23.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். மதுரை மாநகரம், திருநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஜோதிகரன் 1.7.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். வேலூர் மாவட்டம், காட்பாடி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த வாசுதேவன் 2.7.2015 அன்று மாரடைப்பால் காலமானார். விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த இராதாகிருஷ்ணன் 4.7.2015 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்திகளை அறிந்து நான் அதிக துயரம் அடைந்தேன். காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பையா, குமாரசாமி, கலைமணி, வாசுதேவன், இராதாகிருஷ்ணன்; தலைமைக் காவலர்கள் ஆறுமுகம், முருகேசன், நீலமோகன், ஆனந்தன், ஜோதிகரன், முதல்நிலைக் காவலர் தவசீலன் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சினிமா பாடல் வரிகள்
படம் - சிகரம்,பாடியவர் -K.J.Jesuthas
இசை - S.P. Balasubramaniam
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே
தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
************************************
படம் - மன்னாதி மன்னன்
பாடல் - கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்
அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
************************************************
படம்: கடலோரக் கவிதைகள்,இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா+ ஜானகி,பாடல்: வைரமுத்து
அடி ஆத்தாடி...
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா..!
உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி..
மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!
இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ...!
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!
வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!
கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..!
சொல் பொன்மானே...!
அடி ஆத்தாடி...
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது
சரிதானா..!
அடி அம்மாடி..
ஒரு அலை வந்து மனசில அடிக்குது
அது தானா..!
உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!
படம் - பாமா விஜயம்
ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,
அசடா இருந்தா மறுப்பேளாம்,
ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு
உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு
நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
என்னத்த செய்வேள் - ஹாங்
சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -
அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -
ஆங் பல்ல உடப்பேன்
அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா
பாடல்: கண்ணதாசன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
******************************************************
படம் - பலே பாண்டியா,பாடியவர் - ரி.எம்.சௌந்தரராஜன்+P.B.சிறீநீவாஸ்+பி.சுசீலா+ஜமுனா ராணி
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஷ்வநாதன்+ரி.ஆர்.ராமமூர்த்தி
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..
உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ
கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா
*************************************
படம் - தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி சுசீலா
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சுப்பையா, தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஆறுமுகம், முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த தவசீலன் ஆகியோர் 29.6.2015 அன்று மரக்காணம் வட்டம், ஆலம்பாக்கம் கிராமம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேசன் 1.6.2015 அன்று மாரடைப்பால் காலமானார். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த நீலமோகன் 3.6.2015 அன்று சிதம்பரம் புறவழிச் சாலை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் . கோயம்புத்தூர் மாநகரம், உக்கடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்தன் 18.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் . விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குமாரசாமி 23.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த திரு. கலைமணி 23.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். மதுரை மாநகரம், திருநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஜோதிகரன் 1.7.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். வேலூர் மாவட்டம், காட்பாடி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த வாசுதேவன் 2.7.2015 அன்று மாரடைப்பால் காலமானார். விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த இராதாகிருஷ்ணன் 4.7.2015 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்திகளை அறிந்து நான் அதிக துயரம் அடைந்தேன். காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பையா, குமாரசாமி, கலைமணி, வாசுதேவன், இராதாகிருஷ்ணன்; தலைமைக் காவலர்கள் ஆறுமுகம், முருகேசன், நீலமோகன், ஆனந்தன், ஜோதிகரன், முதல்நிலைக் காவலர் தவசீலன் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சினிமா பாடல் வரிகள்
படம் - சிகரம்,பாடியவர் -K.J.Jesuthas
இசை - S.P. Balasubramaniam
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே
தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
************************************
படம் - மன்னாதி மன்னன்
பாடல் - கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்
அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
************************************************
படம்: கடலோரக் கவிதைகள்,இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா+ ஜானகி,பாடல்: வைரமுத்து
அடி ஆத்தாடி...
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா..!
உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி..
மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!
இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ...!
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!
வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!
கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..!
சொல் பொன்மானே...!
அடி ஆத்தாடி...
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது
சரிதானா..!
அடி அம்மாடி..
ஒரு அலை வந்து மனசில அடிக்குது
அது தானா..!
உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!
படம் - பாமா விஜயம்
ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,
அசடா இருந்தா மறுப்பேளாம்,
ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு
உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு
நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
என்னத்த செய்வேள் - ஹாங்
சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -
அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -
ஆங் பல்ல உடப்பேன்
அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா
பாடல்: கண்ணதாசன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
******************************************************
படம் - பலே பாண்டியா,பாடியவர் - ரி.எம்.சௌந்தரராஜன்+P.B.சிறீநீவாஸ்+பி.சுசீலா+ஜமுனா ராணி
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஷ்வநாதன்+ரி.ஆர்.ராமமூர்த்தி
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..
உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ
கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா
*************************************
படம் - தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி சுசீலா
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
No comments:
Post a Comment