Thursday, 6 August 2015

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை! முதல்வர் ஜெ. சந்திப்பாரா? அதிமுக பாஜக கூட்டணி உண்டா?- பரபரப்பு!

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை
முதல்வர் ஜெ. சந்திப்பாரா? அதிமுக பாஜக கூட்டணி உண்டா?- பரபரப்பு!

நாளை பிரதமர் சென்னை வருகிறார். மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். அங்கு நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் நாளையே அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அப்பொழுது அவர் ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்றும் கூட்டணி குறித்து பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment