Wednesday, 5 August 2015

கேமதுருமா யோகம்,அனபா யோகம்,லக்ஷ்மி யோகம்,அஷ்டலக்ஷ்மி யோகம்,சகடயோகம்,குஹு யோகம்,தன ராஜயோகம்,கீர்த்தி ராஜயோகம்,சன்யாச ராஜயோகம்,சந்திரமங்கள யோகம்,மந்திர யோகம்,லய யோகம்,ஹட யோகம்,ராஜ யோகம்,முக்தியோகம்

கேமதுருமா யோகம்!  என்றால்
கேமதுருமா யோகம்! இது ஒரு அவயோகம்! ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்!

சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும் இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம் பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும்.

அனபா யோகம் என்றால் என்ன?

சந்திரனுக்கு 12ல் சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் அதற்கு அனபா யோகம் என்று பெயர்.

1செவ்வாய் இருந்தால் ஜாதகர் வலிமையானவர். சுய கட்டுப்பாடு உள்ளவர்.விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவர், அதுபோன்ற
செயல் செயபவர்களுக்குத் தலைமை ஏற்பார்.

2 புதன் இருந்தால்: ஜாகர் வித்தைகளில் வித்தகர். அறிவாளி சிறந்த பேச்சாளர் மற்றவர்ளை கவரும் திறன் படைத்தவர்.

3. குரு இருந்தால்:அறவழியில் செல்லபர். தன் செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்மகாரியங்களுக்காகச் செலவிடக்கூடியவர்.

4.சுக்கிரன் இருந்தால்:ஜாதகர் ஆண் ஆனால் பெண்களிடத்திலு்ம் பெண் ஆனால் ஆண்களிடத்திலும் வழியக்கூடியவர். அல்லது
பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன்
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.பெண்பித்தராக/ஆண்பித்தராக இருந்து நல் மதிப்பை கெடுப்பவர்.

5. சனி இருந்தால்:ஜாதகர் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவர்.
மாயைகளில் இருந்து விடுபடக்கூடியவர். மொத்தத்தில் முற்போக்குவாதி!

6ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகர் அதிரடியானவர்.
யாருக்கும் வளையாதவர். எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டார்.மொத்ததில் இந்த யோகம் ஜாதகருக்கு நல்ல உடல் அமைப்பையும், நல்ல பண்புகளையும்,சுய மரியாதையையும் கொடுக்கக்கூடியது.

அன்பா யோகம். : சந்திரன் நின்ற ராசிக்கு பன்னிரெண்டாவது ராசியில் ராகு மற்றும் கேது தவிர ஏனைய கிரகங்கள் இருந்தான், அன்பா யோகம் எனப்படும். நல்ல அர்ரோக்கியமும், நல்ல பெயரும், புகழும் உண்டாகும்.

சுனபா யோகம் : சந்திரன் நின்ற ராசிக்கு ரெண்டாவது ராசியில் ராகு மற்றும் கேது தவிர ஏனைய கிரகங்கள் இருந்தான், அன்பா யோகம் எனப்படும். உழைத்து இவர்கள், ராஜ பரிமாணத்திற்கு இணையாக யோகத்தில் இருப்பார்கள்.

லக்ஷ்மி யோகம்

லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக அல்லது திரிகோண வீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும் இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து இருக்கலாம். ஜாதகன் செல்வத்தோடு இருப்பான். உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான். நன்கு கற்றவனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான். நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு. லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக் காலங்களில் பலன்கள் உண்டாகும்

அஷ்டலக்ஷ்மி யோகம்

ராகு ஆறாமிடத்தில் நின்று குரு லக்ன கேந்திரம் அடைந்து நிற்பது அஷ்டலக்ஷ்மி யோகம் எனப்படும். பொதுவாக ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் போன்ற இயற்கை பாப கிரகங்கள் ஆறாமிடத்தில் நிற்பது நன்மையே செய்யும். ருண ரோக சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் நிற்பது அந்த இடத்தை நசிந்து போக செய்யும். அதனால் எதிர்ப்பு இல்லாத ஒரு வாழ்கையை அவர் அனுபவிப்பார்

சகட யோகம் என்றால் என்ன?
சகடயோகம் : குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக் கொடுக்கும். சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர் சக்கர யோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் உசிதம். ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

குஹு யோகம் என்றால் எனன?
குஹு யோகம்: 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும். பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம் வீடு சம்பந்தப்பட்ட பல நல்ல விஷயங்களை ஜாதகன் இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும்.

தன ராஜயோகம் என்றால் என்ன?

2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்

கீர்த்தி ராஜயோகம் என்றால் என்ன?

இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும்

சன்யாச ராஜயோகம் என்றால் என்ன?
9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள்

சந்திரமங்கள யோகம்

ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால், நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது ’சந்திரமங்கள’ யோகம், எனப்படும். ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன். அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். அதுதான் பக்க விளைவு.

சந்திரனுக்கு 6 ,7 ,8 ல் சுப கிரகங்கள் இருந்தால் சந்திர அதி யோகம் (புதன்,குரு,சுக்கிரன்).  சந்திர அதி யோகத்தில் பிறந்தவர்கள் அரசனுக்கு நிகரான வாழ்வு அமையும்.தீர்காயுள்,பகைவர்களை வெற்றி கொள்வர்.ஆரோக்கிய மணவாழ்வும்,வாழ்வில் சுபமுடன் வாழ்வார்கள்.

ராஜ யோகம்
4 வகைப்படும். முக்கியமாக
மந்திர யோகம்
லய யோகம்
ஹட யோகம்
ராஜ யோகம்

மந்திர யோகம் என்றால் என்ன?
பீஜ மந்திரங்களால் ஆன மந்திரங்களை 12 வருடங்களுக்கு தொடந்து ஜபிப்பவர் சித்துக்கள் கைகூடும். இதைதான் மந்திர யோகம் என்கிறோம்.

லய யோகம் என்றால் என்ன?
அன்றாட வேலைகளைப் பார்த்துக்கொண்டும் இடைஇடையே கிடைக்கும் நேரங்களில் இறைவனை நினைத்து தியானம் செய்வது .இவ்வகை யோகமாகம்.

சின் முத்திரைகள்,யோகாசனம், பிரணயாம பயிற்சிகள் போன்றவைகளால் உடல் மற்றும் மனதை சுத்தமாக ஒருநிலைப்படுத்தி வைத்திருக்கம் நிலையே ஹட யோகம் எனப்படும்.

இயம், நியமம் ஆகிய பயிற்சிகளால் மனதை சுத்தமாக்கி சமாதி அணுபவத்தை அடையும் நிலையே ராஜயோகம் எனப்படும்.


முக்தியோகம்

12ஆம் வீட்டில் மோட்சகாரகன் என்னும் கேது நல்ல விதத்தில் இடம் பெற்றிருந்தால் முக்தி யோகம் ஆகும்.

ஜென்ம லக்னம் சிம்மாக இருந்தால் அந்த ஜாதகருக்கு அதுவே கடைசிப் பிறவி மறு பிறவி ஏதும் கிடையாது. இது “முக்தி” ஆகும்.

ஜென்ம லக்கினத்துக்கு 12ஆமிடத்து அதிபதி அதே வீட்டில் ஆட்சி பெற்றிருப்பின் அவருக்கு மறுபிறவி கிடையாது. ‘முக்தி யோகம்’ ஆகும்.

விரய ஸ்தானத்துக்கு விரய ஸ்தானமான 11ஆமிடமான லாப ஸ்தானத்தில் மோட்சகாரகனாகிய கேது இருப்பினும் ‘முக்தி யோகம்’ எனப் பகர்வோருமுண்டு.

விரய ஸ்தானாதிபதியும் வேறு ஏதாவது ஒரு கிரகமும் பரிவர்த்தனை ஆனாலும்கூட முக்தி யோகம் உண்டாகும். எனினும் இப்பிறவியில் பயங்கர சோதனையும் வேதனையும் சந்தித்து புடம் போட்ட தங்கமாக மாறி தீவிர தெய்வ பக்தர்களாக மாறிவிடுவர் என்பது புலனாகும்

சூரியனும் சனியும் பகைக்கோள்களாவது எப்படி ?
சோதிடப்படி சூரியனும், சனியும் பகைக்கோள்கள்தான். புராணப்படி பார்த்தாலும் அவை பகைக்கோள்கள்தான். அறிவியல்படி பார்த்தாலும் அவைகள் பகைக் கோள்கள் தான். சூரிய பகவான் வெண்மை கலந்த செந்நிறமாக இருப்பார். சனி பகவான் கரு நீலம். நிறத்தில் கூட ஒற்றுமை இல்லை. மாறுபட்டுப் பிறந்ததால் பகை உண்டானதாகச்  சொல்லப்படுகிறது. அறிவியில் பூர்வமாகப் பார்க்கும்போது சூரியன் முழுக்க முழுக்க ஹீலியம் வாயு நிறைந்தது. வெப்ப அணுக்கரு உலைகள் கோடிக்கணக்கில் நிறைந்தது. ஆனால் சனியோ கார்பன், கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், ஈத்தேன் கனிமங்கள், வாயுக்களால் நிறைந்தது. சனிக்கும் வெப்பத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை. சனி ஒரு பனிக்கோளாகும். குளிர்ச்சியானது. இதை வைத்து இயல்பாகப் பார்த்தால் சனியும், சூரியனும் வேறுபட்டுத்தான் உள்ளன. அதனால் பகைக் கோள்கள் என்று கூறப்படுகிறது. ஒரு ஜாதகருக்கு சூரியனும், சனியும் ஒரே வீட்டில் அமர்ந்தால் அவருக்கு இதயக் கோளாறு ஏற்படும். ரத்தத்தில் பெரிய பாதிப்பு, நரம்புக் கோளாறு, படபடப்பு ஏற்படுவது, எரிஞ்சு விழுவது போன்றவை ஏற்படும்

எப்பொழுதும் மனைவியை நேசிப்பவர் யார்?. எப்பொழுதும் மனைவியின் ஞாபகமாக இருப்பவர் யார்?

லக்கினாதிபதி 7ல் இருந்தால் சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகர் செல்வந்தராக இருப்பார் அல்லது ஏழையாக இருப்பார். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள். எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி
மகிழ்வுடன் வாழ்வான்.

பல பெண்களுடன் சுத்துகிறவன் யார்?

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
கேது திசை 90% பேர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்காது. கேது ஞானகாரகன். திசை முழுக்கப் பலவிதமான கஷ்டங்களுக்கு ஜாதகனை உட்படுத்தி இறுதியில், திசை முடிவில் ஜாதகனுக்கு ஞானத்தைக் கொடுப்பான். கஷ்டப்படாமல் ஞானம் எங்கிருந்து வரும்? இழப்புக்கள், பிரிவுகள், நஷ்டங்கள், துயரங்கள், துரோகங்கள், துன்பங்கள், உடல்வலி, மனவலி என்று பலவிதமான வலிகளைக் கொடுத்து முடிவில் ஜாதகனை மேன்மைப் படுத்துவான். ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து வலியின் அளவுகள் மாறுபடும். வினை யாராக இருந்தாலும் அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி- எந்த பரிகாரம் செய்தாலும் தீராது . ஆனால் திசை முடிந்த பின்பு கொடுக்கிறான் பாருங்க!!! ஒரு ஞானம்!!! அதுதான் சாமி ஞானம்!!

கல்வியைத் தர வேண்டிய அரசாங்கம் சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
கல்வியும், மருத்துவமும் தர்மத் தொழில்களாகும். ஆனால் இன்று அவற்றில் தர்மம் இல்லை. அவைகள்தான் காசு கொழிக்கும் தொழில்களாகும்.



இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


யார் இந்த மகான்? காண்பது எப்போ? இவரை யார் காணலாம்?

தன்னையே மக்களுக்கும் இறைவனுக்கும் அர்பணித்தவர்.
இவர் பேசுவதெல்லாம் மக்கள் நலனுக்கும் இறைவனை ஜெபிப்பதற்கும் மட்டுமே. இவர் செயலெல்லாம் மக்களின் நன்மைக்கு மட்டுமே
இவர் அறிவெல்லாம் மக்களின் நன்மைக்கும் ஆன்மீகத்திற்கும் மட்டுமே
இவருடைய நண்பர்கள் அனைவரும் மக்களுக்கும் இறைவனுக்கும் தொண்டு செய்வோரே. இவரை தாக்கும் தற்காலிக நோய்களுக்கும் இவர் படும் தற்காலிக அவமானங்களுக்கும் காரணமாக இருப்பதும் மக்களுக்கு மற்றும் இறைவனுக்கு செய்யும் தொண்டுகளாலே! செய்யும் செலவுகள் எல்லாம் மக்களுக்கே அல்லது இறைத் தொண்டிற்கே ! மக்களாளும் இறைத்தொண்டினாலும் இவருக்கு மாபெரும் செலவுகள் உண்டு. அது ஏராளமான கோடிகளாய் அது இருக்கும். இப்படி ஒருவர் பிற்திருப்பார் இவ்வுலகில்! .   தொடரும்....

மேலும் பல யோகங்கள்.
சுபகத்தரி யோகம்
புதாத்திய யோகம்/புதஆதித்ய யோகம்
தர்மகர்மாதிபதியோகம்
திடீர் பணக்கார யோகம்
அமரக் யோகம்
பாஸ்கரா யோகம்
துவஜ யோகம்
சக்கர யோகம்
களத்திர யோகம்
ஆரசௌரி யோகம்
தேவந்திர யோகம்
நிஸ்வா யோகம்
குடை யோகம்
முக்தி யோகம்
தரித்திர யோகம்
வீடு கட்டிக் குடியேறும் யோகம்
நம் கடன் எப்பொழுது தீரும்

கேமதுருமா யோகம்
அனபா யோகம்
லக்ஷ்மி யோகம்
அஷ்டலக்ஷ்மி யோகம்
சகடயோகம்
குஹு யோகம்
தன ராஜயோகம்
கீர்த்தி ராஜயோகம்
சன்யாச ராஜயோகம்
சந்திரமங்கள யோகம்
மந்திர யோகம்
லய யோகம்
ஹட யோகம்
ராஜ யோகம்
முக்தியோகம்


 Best Horoscopes
Horoscope.com
Astrodienst
Astrology.com
Ganesha Speaks
Cafe Astrology
Astrology Zone
Jonathan Cainer
Astrocenter
Astrostyle
Astrotheme
Daily Horoscope
AstroVed
Ask Oracle
AstroYogi
Astrocamp
Clickastro
Eastrolog
Indastro
Astrolis
Find Your Fate

No comments:

Post a Comment