சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் - கர்நாடக அரசு புதிய மனு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 6 தனியார் நிறுவனங்களை இணைக்க கோரி கர்நாடக அரசு நேற்று புதிய மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடக அரசு மனுதாக்கல் செய்ய முடிவெடுத்தது. அதன்படி அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தயாரித்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசின் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் எஸ். ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவகத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவில், “லெக்ஸ் புராப்பர்டீஸ், மெடோ அக்ரோ ஃபர்ம், ரிவர்வே அக்ரோ ஃபர்ம், ராம்ராஜ் அக்ரோ ஃபர்ம், ஆஞ்சநேயா பிரின்டடர்ஸ், இந்தோதோஹா கெமிக்கல்ஸ் உள்ளி ட்ட 6 நிறுவனங்களும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது சட்டப்படி தவறா னது. ஜெயலலிதா உள்ளிட் டோருக்கு சொந்தமான இந்த 6 நிறுவன ங்களும் பினாமி பெயரில் நடத்தப்பட்டவை. எனவே இவற்றை வழக்கில் இணைத் துக்கொள்ள வேண் டும்''என கோரப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த புதிய மனுவை பெற்றுக்கொண்ட உச்ச நீதி மன்ற பதிவாளர் அலுவலகம் அதன் சாராம்சம், கோரிக்கைகள் குறித்த ஆவணங் களை சரிபார்க் கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment