Friday 14 August 2015

சசிபெருமாள் மகனுக்கு ராகுல்காந்தி கடிதம்!

சசிபெருமாள் மகனுக்கு ராகுல்காந்தி கடிதம்!
காங்கிரஸ் சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி
சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது மகன் விவேக்கிற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய போது, உடல் நலக் குறைவு ஏற்பட்டு காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பின்னர் தமிழகத்தில் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளது. இந்நிலையில், காந்தியவாதி சசி பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சேலத்தில் உள்ள அவருடைய மகன் விவேக்கிற்கு, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- மாநிலத்தில் உள்ள மதுகடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது சசி பெருமாளின் துரதிருஷ்டமாக மரணம் குறித்து ஆழ்ந்த துயருற்றேன். காந்தியவாதியான சசி பெருமாள் தன் வாழ்க்கை முழுவதையுமே மது கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். எந்த நோக்கத்துக்காக அவர் வாழ்ந்து மறைந்தாரோ அதை முழுமையான வகையில் எடுத்துக்கொண்ட உங்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் என் நினைவுகளும், பிரார்த்தனை களும் உங்களோடும், உங்கள் குடும்பத்தோடும் இருக்கிறது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, காந்தியவாதி சசிபெருமாள் மரணத்துக்கு இரங்கல்
தெரிவித்து, அவருடைய மகனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது' என்றார்.

விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அன்று தலைமைச்
செயலகத்தில்
, சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 24,942 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத் தினையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியரும் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத் தினையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்ட மன்றத் தொகுதியில் இதுவரை விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும்
மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ் 44,596 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளும், 7106 பள்ளி மாணவ, மாண வியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. 12.8.2015 அன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தின்  கீழ், தண்டையார்பேட்டை (வார்டு எண்.38) மற்றும் புதுவண்ணாரப்பேட்டை (வார்டு எண்.39) பகுதிகளைச் சேர்ந்த 24,942 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதன் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார். மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பட்டேல் நகரில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு 142 மிதிவண்டிகள், திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந் துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு 232 மிதிவண்டிகள், புத்தா தெருவில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு 400 மிதிவண்டிகள், அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகளான தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள முருகதனுஷ் கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 410 மிதிவண்டிகள், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சௌந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 334 மிதிவண்டிகள், என மொத்தம் 1518 விலையில்லா மிதிவண்டிகளை 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதன் அடையாளமாக, 5 மாணவ, மாணவியருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா. வளர்மதி, எஸ்.பி. வேலுமணி, எஸ். கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்: எச்சரிக்கும் நீதிமன்றம்!
சென்னை: மதுக்கடைகளின் வேலை நேரத்தை குறைக்கும்படி அரசை
கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம்
மதுவிலக்கை அமல்படுத்தினால் மக்கள் கள்ளச்சாராயத்தை தேடுவார்கள் என்று  தெரிவித்துள்ளது.

பா.ம.க.வின் சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவராக உள்ள கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழகத்தில் மது தாராளமாக கிடைப்பதால் குற்றங்கள், விபத்துகள் அதிகரிக்கின்றன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். இதனால், குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். மது விற்பனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதன்படி, விற்பனை நேரத்தை ஐந்து மணி நேரமாக மாற்ற வேண்டும்" என்று  கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, " எல்லா பிரச்சனை களையும் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள். எல்லாவற்றுக்கும் நீதி மன்றத்தில் நிவாரணம் கிடைக்கும் என, நினைப்பது தவறு" என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ராஜா, "மது விற்பனை மூலம் ஆண்டுக்குக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நான்கு கோடி ரூபாய்தான் செலவு செய்யப்படுகிறது" என்றார்.
 பின்னர் பேசிய தலைமை நீதிபதி, "மதுவிலக்கை அமல்படுத்தினால், மக்கள்
கள்ளச்சாராயத்தை தேடுவார்கள். அதைதான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? எல்லா பிரச்னைகளையும் நீதிமன்றத்துக்கு இழுக்கக் கூடாது. மதுக் கடைகளின் விற்பனை நேரத்தை, அரசுதான் ஒழுங்குபடுத்த வேண்டும்; அதை, நீதிமன்றம் கூற முடியாது. கடைகளின் நேரத்தை அரசு குறைக்கலாம். பிரச்னை குடிப்பவர்களிடம்தான் உள்ளது. இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டால் கடைகளில் கூட்டம் கூடிவிடும். மதுவிலக்கு பற்றி பேசுபவர்களிடம் ஒருமித்த உணர்வு இல்லை. 1960 வரை மதுவிலக்கு இருந்தது. மதுக்கடைகளை எப்போது திறக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் எப்படி முடிவு செய்ய முடியும்.கடைகளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்கலாம் என நாங்கள் கூறினால், அதன் பின்னணியில் உள்ள பகுத்தாய்வு என்னதாக இருக்கும். எனவே, அரசுதான் இந்த பிரச்னையை பரிசீலிக்க வேண்டும். நேரத்தை குறைத்தால் பாட்டில்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வர். ஒன்று வாங்குவதற்கு பதிலாக கூடுதலாக பாட்டில்களை வாங்குவர். இந்த பிரச்னைக்கு நேரடி தீர்வு இல்லை.சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள்தான் குடியால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். வசதி படைத்தவர்களைப் பற்றி பிரச்னை இல்லை. கூலி வேலை செய்பவர்கள் மதுவுக்கு அடிமையாகின்றனர். பக்கத்துமாநிலங்களான
புதுச்சேரி, கேரளாவில் எந்த கட்டுப்பாடும் இல்லை. புதுச்சேரியில், காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை மதுக்கடைகள் திறந்திருப்பதாக கூறப் படுகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் அது வேண்டும் என்று குழந்தைகள் போல் பிடிவாதம் செய்வர். மதுப்பழக்கத்தில் இருந்து இவர்களை விடுவித்து மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளுடன் வந்தால் அதை பரிசீலிக்கலாம்" என்று  தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில், மனுவில் புதிய கோரிக்கையை சேர்க்க
அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசார ணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


பழைய ரசிக்கத் தக்க பாடல்கள் நீங்களும் இணைய தளங்களில் தேடி இவைகளை ரசிக்கலாமே!

ஏய்... முத்து முத்தா மொட்டு விட்ட வாசமுல்லே..
ஒத்த ரூபா ஒனக்கு தாரேன்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
வெத்தல வெத்தல வெத்தலையோ
பட்டு வண்ண ரோசாவாம்
கூடையிலே கருவாடு
பொதுவாக எம்மனசு தங்கம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
கண்ணத்தொறக்கணும் சாமி
வா வா வாத்தியாரே வா
ஆசை நூறுவகை
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
வான்மேகங்களே வாருங்கள்
பட்டுவண்ண சேலைக்காரீ
பூவே இளைய பூவே
வெத்தலையப் போட்டேண்டி
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
எண்ணியிருந்தது ஈடேற
முத்து மாணிக்க கண்கள்
ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன்
சுராங்கனி சுராங்கனி
செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா
ஏறாத மலை மேல
ஏத்தமய்யா ஏத்தம்
தாலாட்ட நான் பிறந்தேன்
உன்னப்பார்த்த நேரம்
அரிசிகுத்தும் அக்காமகளே
ஆப்பக்கடை அன்னக்கிளி
பொன்மானைத் தேடி
ஆத்து மேட்டிலே
பெத்து எடுத்தவதான்
தானந்தனா கும்மி கொட்டி
வெட்டிவேரு வாசம்
உச்சி வகிர்ந்தெடுத்து
மலையோரம் மயிலே
மனிதன் மனிதன்
மாமாவுக்கு குடுமா
கோடைக் காலக் காற்றே
பூங்காற்று திரும்புமா
ஒன்னப் பார்த்த நேரம்'
தானந்தன கும்மி கொட்டி
பூவே இளைய பூவே
கோடை காலக் காற்றே

“எல்லோரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போகப்போறோம்?
கடைசியில எங்கே கொண்டு வைக்கப்போறோம்?”

No comments:

Post a Comment