Friday 28 August 2015

அகஷ்ட்டஷ் சீசர் மற்றும் ஜூலியஸ் சீசரின் வரலாறு

அகஷ்ட்டஷ் சீசர் மற்றும் ஜூலியஸ் சீசர் வரலாறு

அகஸ்ட்டஸ் சீசர்/அகஸ்து சீசர்
ரோம சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர். அவரின் அசரவைக்கும் வாழ்க்கையில் இருந்து சிலத்துளிகள் :  ஜூலியஸ் சீசரின் தங்கையின் பேரன் இவர். பிறந்த நான்காம் வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார் ரோமப் பேரரசை ஆண்டவர். கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ்/ஆக்டேவியன் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர் கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். ஹிஸ்பானியா (நவீன ஸ்பெயின் ) மீது
நடந்த தாக்குதலின் பொழுது கடலில் மாட்டிக்கொண்டார். தீரமாக செயல்பட்டு
தப்பிவந்த  பொழுது வயது பதினெட்டுக்குள்.  ஒக்டேவியஸ் கிமு 27 ஆம்
ஆண்டிலிருந்து கிபி 14 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ரோமப் பேரரசை
ஆண்டு வந்தார். கிமு 44 ஆம் ஆண்டில் ஜூலியஸ்சீசர் கொலை செய்யப்பட்டர். ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரியாக முயற்சி செய்கிறார் என்று படுகொலை செய்யப்பட்ட பின் அவரின் உயில் திறக்கப்பட்டது. அதில் இவரை அவரின் வாரிசு என்று அறிவித்து இருந்தார்.மார்க் ஆண்டனி ,ஆக்டேவியன் இருவரும் எதிரிகளை வென்ற பின்பு இருபகுதிகளாக வெற்றி பெற்ற பகுதிகளை பிரித்துக்  கொண்டனர். ஆக்டேவியன் ஆகிய அகஸ்து சீசரின் தங்கையை மணந்திருந்த  மார்க் ஆண்டனி ஆப்ரிக்காவை ஆளப்போன இடத்தில் கிளியோபட்ராவின் அழகில் கிறங்கி அங்கேயே கிடந்தார். இவரின் தங்கையை விவாகரத்தும் செய்தார். மார்க் ஆண்டனியை போரில் வென்ற பின்பு நாட்டின் தலைமைப்பொறுப்புக்கு வந்தார். மன்னன் என்று சொல்லிக் கொள்ளாமல் பதவியை நோக்கி நகர்ந்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கர்ப்பமாக இருந்த தன்னுடைய காதலி லிவியாயை திருமணம் செய்து கொண்டார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் என்று மக்கள் பயந்தார்கள். செனட்டுக்கு கட்டுப்பட்டவன் என்று நாடகம் போட்டு திரைமறைவில் நாட்டை பேரரசராக ஆண்டார். ரோம சாம்ராஜ்யப் பரப்பு ஐரோப்பா,ஆசியா என
பரந்து  விரிந்தது. நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் உலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது அகஸ்து சீசர் தான். சிறப்பு மிகுந்த திறனோடு செயல்படும் அஞ்சல் துறையையும் உருவாக்கினார். போர் நடக்கிற இடங்களில் எல்லாம் அற்புதமான சாலைகளை கட்டினார். அரசியல் சட்டத்தை உருவாக்கி இருநூறு ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார். இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை இவர் காலத்தில் உச்சம் அடைந்தது. விர்ஜில் மற்றும் ஹோரஸ் முதலிய மேதைகள் இவரால் பேணப்பட்டார்கள். மக்களுக்கு பொழுதுபோக்கைத் தர கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். பத்தாயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் பங்கு கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இறக்கும் அந்த விளையாட்டுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது.  சர்க்கஸ்க்கு ஆப்ரிக்காவில் இருந்து விலங்குகளை கொண்டு வந்து கொடுத்தார் அவர். அதில் பலவற்றை வேட்டையாடிக் கொன்றார்கள் ரோமானியர்கள். ஒழுக்கத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் தந்தார். சொந்த மகளையே தன்னுடைய  விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்று நாட்டை விட்டு வெளியேற்றினார். வளர்ப்பு மகன் தைபிரீயசுக்கு  தன்னுடைய மகளை திருமணம் செய்து வைத்தார். அந்த வளர்ப்பு மகனையே தனக்கு பின் வாரிசாக அறிவித்தார்.அவர் இறந்த பொழுது அவரை ,’கடவுள்’ என்றும், அவரையே வழிபட வேண்டும் என்றும் செனட் அறிவித்தது. நூறு வருடகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு பின்னர் இவரின் ஆட்சி அமைதியைத் தந்தது. ஆகவே ‘என்னிடம் களிமண்ணாக ரோமை கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன் !’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம். அவரின் நினைவாக செக்ஸ்ட்டிலிஸ்  ஆகஸ்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரோமக் குடியரசில், ரோமச் சர்வாதிகாரி என்ற பதவி இருந்ததுபோல, ரோமப்  பேரரசன் என்னும் பதவி சட்ட அடிப்படையில் இருக்கவில்லை. ரோமச் சர்வாதிகாரி என்னும் பதவியை முன்னர் ஜூலியஸ் சீசரும், சுல்லாவும் வகித்திருந்தனர். மக்கள் இப்பதவியை ஏற்கும்படி கூறியபோதும் அகஸ்ட்டஸ் அதனை ஏற்கவில்லை. வாழ்க்கைக் காலம் முழுவதற்குமாக சில அதிகாரங்கள் செனெட்டினால் சட்டமுறையில் அகஸ்ட்டசுக்கு வழங்கப்பட்டிருந்தன. கிமு 23 வரை அகஸ்டஸ்  கொன்சல் பதவியை வகித்து வந்தார். அகஸ்ட்டசின் அதிகார வளர்ச்சிக்குப்  பின்னணியில், நிதிநிலை வளர்ச்சி, பிற நாடுகளைப் கைப்பற்றியதன் மூலம்  கிடைத்த வளங்கள், படைவீரர்களின் விசுவாசம், மக்களிடையே அவருக்கு இருந்த  மதிப்பு போன்ற பல காரணங்கள் இருந்தன.

 ---------------------

ஜூலியஸ் சீசர் இறந்த பின் ரோமக் குடியரசின் ஆட்சியைப் பிடிப்பதில்
தளபதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே பல காலம் கடும்
போராட்டம் நடந்தது. ஜீலியசு சீசரின் தளபதிகள் பலர் அகசுடசு சீசரின் வயதோடு அதிக அரசியல் அனுபவத்தை கொண்டிருந்தனர். தன் வளர்ப்புத் தந்தையின் காலத்தில் அதிகாரமிக்க தளபதிகளை எல்லாம் நண்பராக்கிக் கொண்டார். எதிர்த்தவர்கள் மேல் போர் தொடுத்து வெற்றி பெற்றார். அந்தோனி என்ற தளப்தி மட்டும் இன்னும் எஞ்சியிருந்தார். அந்தோனியுடன் சீசர் ஒப்பந்தம் செய்து கொண்டு ரோமக் குடியரசின் கிழக்குப் பகுதியை அந்தோனிக்கு கொடுத்து விட்டு மேற்குப் பகுதியை சீசர் எடுத்துக் கொண்டார். இருவருக்குமிடைய சில ஆண்டுகள் வரை அமைதியற்ற போர் நிறுத்தம் நிலவியது. அதுவரைக்கும் குடியரசாக இருந்த ரோம் மீண்டும் முடியராசுகளாய் பிரிந்தன. போர் அந்தோனிக்கும் சீசருக்கும் போர் நிறுத்தம் நிலவிய காலத்தில் அந்தோனி எகிப்திய அரசியான கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி ஆட்சியில் கவனம் செலுத்தாமல்  இருந்தார். அந்நேரங்களில் சீசர் தனக்கான படை பலங்களையும் அரசியல்  பலங்களையும் அதிகரித்துக் கொண்டார். கி. மு. 32ஆம் ஆண்டில் இருவருக்கும் போர் மூண்டது. கி.மு. 31ஆம் ஆண்டில் அப்போரின் தொடர்ச்சியான ஆக்டியம்  கடற்சமர் ஏற்பட்டது. அதில் அந்தோனி ஐநூறு கப்பல்களை வைத்திருந்தார்.  அவற்றில் 230 கப்பல்கள் நல்ல கட்டமைப்புடனும் உயர் கண்கானிப்பு  கோபுரங்களோடும் அமைந்திருந்தன. சீசரிடம் 250 கப்பல்களே இருந்தன. ஆனாலும்  சீசரின் கடற்படையே வெற்றி பெற்றது. கிளியோபாட்ராவும் அந்தோனியும்  தற்கொலை செய்து கொண்டனர். மேற்குப்பகுதிகளும் கிழக்குப் பகுதிகளும்
இணைந்து ரோமப் பேரரசு உருவெடுத்தது. இவர் சங்ககால தமிழகத்தோடு
வைத்திருந்த வணிக தொடர்பினை தமிழகத்தில் கிடைத்த இவரது நாணயங்கள்  உறுதிப்படுத்துகின்றன. சங்க இலக்கியத்திலும் யவனர் என்ற சொல் இவர்களையும்  குறிப்பதாக உள்ளது. நிகோலசு தமாசுகசு என்பவர் இந்த அகஸ்ட்டஸ் கால ரோமப்  பேரரசின் வரலாற்றியல் மற்றும் தத்துவவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் தன்  இறுதி நாட்களில் 144க்கும் மேற்ப்பட்ட உலக வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.  ஸ்டிரேபோ எழுதிய குறிப்புகளில் பாண்டியர் சார்பில் ஒரு தூதுவன் கி.பி. 13ஆம்  ஆண்டில் இந்த அகஸ்ட்டஸ் மன்னரவைக்கு தூதனாக வந்தான் எனவும் அவனை  நிகோலசு தமாசுகசு அகசுடசு சார்பில் சந்தித்தார் எனவும் குறிப்பிடுள்ளார்.

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட கதை

இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான
ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான
பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும்,மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர் . உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது . சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,“கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு
பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார்,பேச்சுக்கலையில்
சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார். ;பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார். ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத்
தேர்ந்தெடுக்கப்-பட்டார்,எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம்  பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார்.  ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ்,  மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு  மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர்.  போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட,நீயா நானா போட்டி சீசர் மற்றும்  பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது  சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே … போர் மூண்டது. பலகாலஇழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர்
தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரைமகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான். அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார்.அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற
பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதியசெனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது.செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர். குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள். அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,”நீயுமா குழந்தையே ?” என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே
ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ்பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல்“.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதமே.

சீசர் சொன்ன 6 தவறுகள்
மனிதர்கள் ஆறு தவறுகளை எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் திரும்பத்திரும்பசெய்கிறார்கள். அதை தவிர்க்கலாம் என்றார் அவர். அவை :

மற்றவரை நசுக்கியே நாம் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை

மாற்றவோ,சரி செய்யவோ முடியாதவற்றைப்பற்றி கவலைப்படுதல்

ஒரு செயலை நம்மால் சாதிக்க முடியவில்லை என்பதால் அதை சாதிப்பது

சாத்தியமே இல்லை என்று அழுத்திச்சொல்வது

ஒன்றுமே பெறாத விஷயங்களுக்கு முன்னுரிமை தருவது அறிவின் வளர்ச்சி பற்றும் நம்மை நாமே பண்படுத்தலை உதாசீனப்படுத்துவது

நம்மைப் போலவே வாழவும், நம்பவும் சொல்லி  சகமனிதரை கட்டாயப் படுத்துவது.

ப்ருட்டசை தோற்கடிக்க மார்க் அன்டனி மற்றும் ஆக்டேவியஸ் கைகோர்த்த

பொழுது இவரைக்கொல்ல மார்க் அன்டனி உத்தரவிட்டான் . இவரை மக்கள்

காட்டிக்கொடுக்க மறுத்தார்கள் ;ஆனால் இறுதியில் இவரை கண்டறிந்து வெட்ட வீரன் வந்த பொழுது .”தலையை குனிந்து ,”நீங்கள் செய்கிற எதுவும் சரியில்லை;இதையாவது ஒழுங்காக செய் !”என்று கம்பீரமாக சொல்லி இறந்து போனார்.

இவரின் வளர்ப்புத் தந்தையான ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். கி.மு. 41 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா,காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர்.பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனானஅக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.

No comments:

Post a Comment